6 மணி நேரத்தில் உருவாகும் ஃபெங்கல் புயல்.. மணிக்கு 13 கிமீ வேகம்! இன்றும் ரெட் அலெர்ட்!

Prasanth Karthick
புதன், 27 நவம்பர் 2024 (08:40 IST)

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைய உள்ள நிலையில் இன்றும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாகை அருகே கடல்பகுதியில் மையம் கொண்டுள்ளது. இது புயலாக வலுவடைய உள்ள நிலையில் புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட உள்ளது. இதன் காரணமாக நேற்று முதலாகவே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

 

முக்கியமாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றும் பல மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் தொடர்கிறது.

 

தற்போது தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் தொடர்ந்து நகர்ந்து, நாகப்பட்டிணத்தில் இருந்து 400 கிமீ தென் கிழக்கிலும், சென்னையில் இருந்து 590 கி.மீ தெற்கு - தென்கிழக்கிலும் நிலைக் கொண்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை புறநகரில் இன்றிரவு முதல் மழை தீவிரமடையும்: தமிழ்நாடு வெதர்மேன்

அரசியலுக்கு வருகிறாரா பிரியங்கா காந்தியின் மகன்? ராபர்ட் வதேரா விளக்கம்..!

பிரபல அரசியல் தலைவர் மற்றும் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை.. 2 பான்கார்டு வைத்திருந்த வழக்கு..!

'இந்தியா' கூட்டணிக்கு தலைமையை மாற்ற வேண்டும்; அகிலேஷ் யாதவ் பெயரை முன்னிறுத்திய சமாஜ்வாடி!

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு.. கலவரம் செய்பவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments