Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போஸ்ட் ஆபிஸில் ஒரு கோடி மோசடி: காரைக்குடியில் பெண் அலுவலர் கைவரிசை

போஸ்ட் ஆபிஸில் ஒரு கோடி மோசடி: காரைக்குடியில் பெண் அலுவலர் கைவரிசை
, சனி, 18 ஜூன் 2016 (07:49 IST)
காரைக்குடி தலைமை தபால் நிலையத்தில் உதவி பெண் அலுவலராக பணியாற்றும் எம்.சி.ஏ பட்டதாரியான முத்துமதி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய் முறைகேடாக பரிமாற்றம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.


 
 
காரைக்குடி தலைமை அஞ்சலகத்தில் பல மாதங்களாக தங்கள் சேமிப்பு கணக்கை பராமரிக்காமல் இருப்பவர்களின் கணக்கை பயன்படுத்தி அஞ்சலக அலுவலக ஊழியர் சிலர் முறைகேடாக பணப்பரிவர்த்தனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
 
இந்த சம்பவம் குறித்து தென்மண்டல இயக்குநர் நிர்மலா தேவி குழுவினர் விசாரணை நடத்தி பல அதிர்ச்சி தரும் தகவல்களை கண்டறிந்துள்ளனர். அஞ்சலக உதவி பெண் அலுவலரான முத்துமதி எம்.சி.ஏ பட்டதாரி என்பதால், அவர் அஞ்சலக அலுவலர்களின் கணினி பாஸ்வேர்டை பயன்படுத்தியும், ஏடிஎம் மூலமாகவும் கடந்த 2 ஆண்டுகளாக பல லட்சம் ரூபாயை முறைகேடாகப் பரிமாற்றம் செய்திருப்பது தெரிய வந்ததுள்ளது.
 
இது குறித்து முத்துமதி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள், காரைக்குடி அஞ்சலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் வீடுகளிலும், அஞ்சலக சேமிப்பு கணக்கு முகவரின் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
 
இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தியதில், சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் இதில் முறைகேடு நடந்திருப்பதாக தெரியவந்துள்ளதை. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சம்மந்தப்பட்ட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேராசிரியையிடம் ஆட்டோ ஓட்டுநர் வழிப்பறி