பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு வலியுறுத்தி உள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள குஷ்பு, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முழுப்பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில் மம்தா பானர்ஜி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
மேலும் முதலமைச்சராக தொடர்வதற்கு மம்தா பானர்ஜிக்கு தகுதி இருக்கிறதா என கேள்வி எழுப்பிய குஷ்பு, மேற்குவங்க விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வாய் திறக்கவில்லை என்று விமர்சித்தார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஏன் பேசாமல் இருக்கிறார்? என்றும் பிரியங்கா காந்தி எங்கே இருக்கிறார்? என்றும் குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.