Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தைரியமான ஆம்பளையா இருந்தா அம்மா கொடுத்த பதவியை ராஜினாமா செய்யுங்க: அதிமுக பெண் தொண்டர் பாய்ச்சல்!

தைரியமான ஆம்பளையா இருந்தா அம்மா கொடுத்த பதவியை ராஜினாமா செய்யுங்க: அதிமுக பெண் தொண்டர் பாய்ச்சல்!

Advertiesment
தைரியமான ஆம்பளையா இருந்தா அம்மா கொடுத்த பதவியை ராஜினாமா செய்யுங்க: அதிமுக பெண் தொண்டர் பாய்ச்சல்!
, வியாழன், 29 டிசம்பர் 2016 (16:08 IST)
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்தனர் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள். இதனை எதிர்த்து அதிமுகவினர் வேலூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 
 
சசிகலாவை கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தான் ஆதரிக்கின்றனர். ஆனால் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆங்காங்கே அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
சசிகலாவை எதிர்த்து வேலூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பேசிய ஒரு அதிமுக பெண் தொண்டர், சரியான ஆம்பளையா இருந்தா தனியா நின்னு ஜெயிச்சுட்டு வாங்க. அம்மா கொடுத்த பதவியை ராஜினாமா பண்ணிட்டு தனியா நின்னு ஜெயிங்க பார்ப்போம் என்று சவால் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
தொடர்ந்து பேசிய அந்த பெண், அம்மா கொடுத்த பதவியை ராஜினாமா பண்ணிட்டு தனியா நின்னு ஜெயிச்சுட்டு வர அருகதை இல்லை. அம்மா கொடுத்த பதவியைக் காப்பாத்திக்கிறதுக்காக யாருக்கோ மணி அடிச்சு கும்பிடறீங்க என்றார்.
 
மேலும் வீட்டில் அம்மா செத்தா, 90 நாள் துக்கம் அனுசரிக்க வேண்டாமா?. பெண்கள் நாங்க தலையில் பூ வைக்காம இருக்கோம். அந்த உணர்வு கூட உங்களுக்கு இல்லை. உப்பு போட்டுச் சாப்பிடலை நீங்க. உரைக்கலை உங்களுக்கு. ரத்தம் துடிக்குது எங்களுக்கு என்று ஆவேசமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்கா இடத்தில் நானா? - போயஸ் கார்டனில் உருகிய சசிகலா..