Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

Mahendran
திங்கள், 24 ஜூன் 2024 (16:31 IST)
சவுக்கு சங்கர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை எடிட் செய்திருக்கலாமே என ஃபெலிக்ஸ்க்கு கேள்வி கேட்ட நீதிபதி அவருடைய ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
காவல் துறையில் உள்ள பெண் அதிகாரிகளை ஆபாசமாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் இதே வழக்கில் அவரை பேட்டி எடுக்க யூடியூப் சேனல் நிர்வாகி ஃபெலிக்ஸ் கைது செய்யப்பட்டார் 
 
ஃபெலிக்ஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  இந்த விசாரணையின் போது உள்நோக்கத்துடன் பெலிக்ஸ் கேள்வி கேட்டதாகவும் காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உயர் அதிகாரிகளின் பெயர்களை பேசியதாகவும் இதுபோன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
 
அப்போது ஃபெலிக்ஸ்  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ’47 நாட்களாக தனது கட்சிக்காரர் சிறையில் இருப்பதாகவும் சவுக்கு சங்கரின் கருத்துக்கும் தமது கட்சிக்காரர் கருத்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் கூறினார். 
 
அப்போது நீதிபதி சர்ச்சைக்குரிய கேள்விகளை எடிட் செய்திருக்கலாம், சவுக்கு ஷங்கரின் சர்ச்சை கூறிய கருத்துக்களையும் எடிட் செய்திருக்கலாம் ,எனவே ஒரு தவறான பிரச்சனையை தூண்டும் வகையில் தான் மனுதாரர் கேள்வி உள்ளது என்று கூறி அவருடைய ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments