Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

Senthil Velan
திங்கள், 24 ஜூன் 2024 (16:19 IST)
விஷச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் குறித்து இந்தியா கூட்டணியினர்  மௌனம் காப்பது ஏன் என்று  மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட விஷச்சாராய மரணம் குறித்து காங்கிரஸ் உள்ள கட்சிகள் பேசாதது ஏன் என்று பாஜக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன்,  அரசியலமைப்பு சட்டம் மீது பிரதமர் மோடி எப்போதும் மரியாதை மற்றும் நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
 
தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏற்பட்ட மரணம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மௌனமாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், இந்தியா கூட்டணி கட்சிகளின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றார். தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சி என்பதால் மௌனமா என்றும் இவர்கள் அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் சமூக நீதி பற்றி பேசுகிறார்கள் என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.

ALSO READ: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! 35 பேரின் மனுக்கள் நிராகரிப்பு..!!

பாதிக்கப்பட்ட இடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இதுவரை செல்லவில்லை என்றும் அதனால்தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சி.பி.ஐ. விசாரணை கேட்டதாகவும் எல்.முருகன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments