Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லி அண்ணா - கலைஞர் அறிவாலயம் சிறப்புகள் என்ன??

டெல்லி அண்ணா - கலைஞர் அறிவாலயம் சிறப்புகள் என்ன??
, சனி, 2 ஏப்ரல் 2022 (09:03 IST)
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய கட்டடத்தை மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்துவைக்கிறார்.

 
கடந்த 2013 ஆம் ஆண்டு திமுகவுக்கு இந்த இடத்தை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், கடந்த ஆண்டு கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு, தற்போது பணிகள் முடிந்துள்ளன. டெல்லி தீன்தயாள் மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
1. மூன்று தளங்கள் உள்ள கட்டடத்தின் கீழ்தளத்தில் கட்சி கூட்டங்களை நடத்துவதற்காக பெரிய அரங்கம்.
 
2. முதல் தளத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து பேசு இடம்.
 
3. முதல் தளத்திலும், 2 ஆம் தளத்திலும் கருத்தரங்கு அறைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. 
 
4. 3-வது தளத்தில் எம்.பி.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தங்குவதற்காக அறைகள் கட்டப்பட்டுள்ளன.
 
5. நூலகம், செய்தியாளர்களுக்கென தனி அறை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் வேதா நிலையம்: உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு!