Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெளதமியை தொடர்ந்து இன்னொரு பாஜக பிரபலம் விலகல்: அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு..!

Siva
வியாழன், 15 பிப்ரவரி 2024 (18:28 IST)
நடிகை கெளதமி கடந்த மாதம் பாஜகவில் இருந்து விலகிய நிலையில் நேற்று அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் கௌதமியை அடுத்து பாஜகவின் தென் மாநில சிறுபான்மை அணி பொறுப்பாளராக இருந்த பாத்திமா அலி என்பவர் அந்த கட்சியில் இருந்து விலகி இன்று எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தேர்தல் நெருங்க நெருங்க ஒரு கட்சியிலிருந்து விலக்கி இன்னொரு கட்சிக்கு தாவும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக பல்வேறு கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது பாஜகவில் இருந்து விலகி வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். 
 
தமிழ்நாடு புதுச்சேரி சிறுபான்மை மாநில செயலாளராக இருந்து வந்த பாத்திமா அலி திடீரென இன்று பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் 
 
இஸ்லாமியர் மற்றும் இஸ்லாமியர் வாழ்விடங்கள் குறிவைத்து தாக்கப்படுவதால் பாஜகவில் இருந்தால் ஒரு இஸ்லாமியராக இருப்பதற்கே நான் தகுதி இல்லாதவளாக போய் விடுவேன் என்றும் ராமர் கோவில் விவகாரத்தை அடுத்து கிருஷ்ணர் கோயில் என்று பேச்சுக்கள் கிளம்பி உள்ளதால் என்னால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

சங்கி என்றால் நண்பன் அல்லது தோழன் என்று அர்த்தம்: சீமான் விளக்கம்

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments