பெற்ற மகளை உடலுறவுக்கு அழைத்த தந்தை: தடுத்ததால் நடந்த விபரீதம் - (வீடியோ)
பெற்ற மகளை உடலுறவுக்கு அழைத்த தந்தை: தடுத்ததால் நடந்த விபரீதம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை சேர்ந்த சேஷாத்ரி என்பவருக்கு குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் இவர் போதையில் தனது மகளை தன்னுடன் உடலுறவுக்கு அழைத்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சேஷாத்ரி தனது வேலையை முடித்துவிட்டு செம்ம போதையில் நள்ளிரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது தனது மகளின் அருகே சென்று அவரை தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
தந்தையின் இந்த செயலை பார்த்த 10-ஆம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி சத்தம் போட்டு தனது தாயிடம் கூறியுள்ளார். அவரது தாய் அதனை தடுத்ததும் ஆத்திரத்தில் சேஷாத்ரி அருகில் இருந்த அம்மிக்கலை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர் அதனை தடுக்க வந்த மகளின் தலையிலும் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது தாயும் மகளும் ரத்த வெள்ளத்தில் இறந்த கிடந்துள்ளனர். சேஷாத்ரி ரத்த கறையுடன் தப்பித்து ஓடியுள்ளார்.
அதன் பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை உடலை கைப்பற்றி தலைமறைவான சேஷாத்ரியை தேடி வந்தனர். பின்னர் காப்பு காட்டு பகுதியில் தலைமறைவாக இருந்த சேஷாத்ரியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.