Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வருங்கால மருமகளை பலாத்காரம் செய்த தந்தை – அமமுக பிரமுகரின் அருவருக்கும் செயல் !

Advertiesment
வருங்கால மருமகளை பலாத்காரம் செய்த தந்தை – அமமுக பிரமுகரின் அருவருக்கும் செயல் !
, ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (09:23 IST)
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பு நித்யானந்தம் என்பவர் தனது மகனின் காதலைப் பிரிக்க அவரது காதலியைத் தாலி கட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பு நித்யானந்தம். ஜவுளிக்கடை நடத்தி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முக்கிய பதவியில் இருந்து வருகிறார். சென்னையில் வேலை செய்யும் இவரது மகன் முகேஷ் தன்னுடன் கல்லூரியில் படித்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விஷயம் அறிந்த நித்யானந்தம் அந்த பெண்ணுக்கு போன் செய்து இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி அவரைத் தனியாக பேச அழைத்துள்ளார்.

அவரின் பேச்சை நம்பிய அந்த பெண் வருங்கால மாமனாரைப் பார்க்க சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்றபின் நித்யானந்தம் தனது கொடூர முகத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளார். வீட்டுக்கு வந்த அந்த பெண்ணின் செல்போனைப் பிடுங்கிக்கொண்டு அவருக்குக் கட்டாயமாகத் தாலி கட்டியுள்ளார். அதன் பின்னர் அந்த பெண்ணை இரண்டு நாட்கள் தனியாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து அடித்து உதைத்துள்ளார். பின்னர் நண்பரின் வீட்டில் அந்த பெண்ணை அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

இதைப் பற்றி அறிந்த மகன் முகேஷ் தனது காதலியைக் கண்டுபிடித்து காவல்துறையினரிடம் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.  உடனடியாக காவல்துறை நித்யானந்தம் மற்றும் அவருக்கு உதவியவர்களைக் கைது செய்தது. அதன் பின்னர் தனது தந்தை கட்டிய தாலியைக் கழட்டி எரிந்துவிட்டு காதலியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவில் இணைந்த அஜித், விஜய் பட இயக்குனர்