மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

Siva
திங்கள், 27 மே 2024 (14:32 IST)
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மருமகளை பெட்ரோல் ஊற்றி மாமனார் உயிருடன் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உமா என்பவர் பிரபாகர் என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் கணவர் மற்றும் இளைய மகள் உயிரிழந்த நிலையில் மூத்த மகளுடன் உமா தனது மாமனாருடன் வசித்து வந்தார்

இந்த நிலையில் மாமனாருக்கும் உமாவுக்கும் சொத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மாமனார் தூங்கிக் கொண்டிருந்த மருமகள் உமா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

இதனை அடுத்து தனது மருமகள் தற்கொலை செய்து கொண்டார் என்று நாடகமாடிய நிலையில் போலீசாரின் விசாரணைக்கு பின்னர் அவர் தனது மருமகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments