Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜடேஜாவை எங்களிடம் இருந்து பிரித்துவிடடார்…மருமகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்த தந்தை!

Advertiesment
ஜடேஜாவை எங்களிடம் இருந்து பிரித்துவிடடார்…மருமகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்த தந்தை!

vinoth

, சனி, 10 பிப்ரவரி 2024 (07:32 IST)
இந்திய அணிக்காக கடந்த 15 ஆண்டுகளாக விளையாடி வருபவர் ரவிந்தர ஜடேஜா. மூன்று வடிவ போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை அணிக்காக விளையாடி கடந்த ஆண்டு அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அரசியல் தரப்பில் பாஜக ஆதரவாளராக ஜடேஜா தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். இந்நிலையில் வரும் குஜராத் சட்டசபைத் தேர்தலில் ஜடேஜாவின் மனைவி ரிவாபா, பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இப்போது ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் அளித்த பேட்டியில் “என் மகனும் நாங்களும் ஒரே தெருவில் வசித்தாலும், அவனை எங்களால் பார்க்கமுடியவில்லை. அவர்களோடு எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் திருமணமான மூன்றே மாதத்தில் அனைத்து சொத்துகளையும் ரிவாபா, தன் பெயருக்கு மாற்றிக்கொண்டார். அவரை கிரிக்கெட் வீரராக்க நாங்கள் கடுமையாக உழைத்தோம். அவன் சகோதரி நைனா அவனை தாய் போல பார்த்துக்கொண்டார். என் பேத்தியின் முகத்தைக் கூட நாங்கள் பார்க்க ஜடேஜாவின் மாமியார் அனுமதிப்பதில்லை.” எனக் கூறியுள்ளார்.

ஆனால் தந்தையின் இந்த குற்றச்சாட்டுகளை ஜடேஜா முற்றிலுமாக மறுத்துள்ளார். தன்னுடைய மனைவியின் புகழுக்கு களங்கம் விளைவிக்க யாரோ சொல்லிக்கொடுத்து அவர் இப்படி பேசுவதாகக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் பதக்கங்கள் இதில் செய்ததா?