Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சதுரகிரி கோயிலுக்கு வந்த தந்தை, மகன் மாயம்.. தேடுதல் வேட்டையில் போலீசார்..!

Sathuragiri Hills
, புதன், 16 ஆகஸ்ட் 2023 (19:43 IST)
சதுரகிரி கோவிலுக்கு சென்ற தந்தை மகன் திடீரென மாயமானதை அடுத்து அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் ஆடி அமாவாசை தினத்தில் ஏராளமான பக்தர்கள் சுந்தரம் மகாலிங்கம் கோவிலுக்கு வருவது வழக்கம். 
 
அந்த வகையில் இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இந்த நிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வந்த தந்தை மகன் திடீரென மாயமானதாக தெரிகிறது. 
 
மாயமானவர்கள் திருச்சியை சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது மகன் பாலகுமாரன் என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மாயமான தந்தை மகனை சதுரகிரி காட்டில் தேடும் பணியில் போலீசார் உள்ளனர்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா பற்றி சர்ச்சை பேச்சு: கேள்வி எழுப்பும் அனைவருக்காக இந்த 5 ட்வீட்கள் - நிர்மலா சீதாராமன்