Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறந்தாங்கியில் அரங்கேறிய அவலம்: மகளை கர்ப்பமாக்கிய தந்தை

அறந்தாங்கியில் அரங்கேறிய அவலம்: மகளை கர்ப்பமாக்கிய தந்தை
, புதன், 20 பிப்ரவரி 2019 (16:46 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி களப்பக்காடு என்ற பகுதியில் மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த பெண் குழந்தையை இரண்டாவது கணவர் கற்பழித்து கர்ப்மாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அறந்தாங்கியில் வாழ்ந்த முத்துலட்சுமி - சேகர் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆன போது எதிர்பாராத விதமாக சேகர் மரணமடைந்தார். இதனால், குழந்தையுடன் தனது அப்பா வீட்டிற்கு சென்று முத்துலட்சுமி வாழ்ந்து வந்தார். 
 
இப்படி இருக்க முத்துலட்சுமிக்கு மினிலாரி டிரைவர் ரவிச்சந்திரன் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை அப்பாவிடம் விட்டுவிட்டு இரண்டாவது கணவருடன் மீண்டும் அறந்தாங்கிக்கு குடிபெயர்ந்தார். 
 
முத்துலட்சுமி - ரவி சந்திரன் தம்பதிடினருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் பிறந்தனர். இந்நிலையில், முதல் கணவரின் குழந்தையை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்க வைக்க அறந்தாங்கிக்கு அழைத்து வந்தார் முத்துலட்சுமி. 
 
சம்பவ நாளன்று முத்துலட்சுமியும் இரண்டாவது கணவருக்கு பிறந்த 3 குழந்தைகளும் வீட்டில் இல்லாத சமயத்தை பயன்படுத்திக்கொண்டு ரவி சந்திரன், சேகரின் மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 
 
இதனால் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்த விவகாரம் தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த முத்துலெட்சுமி, அறந்தாங்கி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, விசாரணைக்கு பின்னர் போலீஸார் ரவிச்சந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு 20 உனக்கு 40; வயதை மீறிய கள்ளக்காதல்: கடைசியில் நடந்த விபரீதம்