Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசையை கேவலமாக கிண்டலடித்த பிரபல ஊடகம்!!

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (08:46 IST)
தமிழிசையின் உருவத்தை பிரபல ஊடகம் படு மோசமாக கிண்டலடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக பாஜக தலைவராக பதவி வகிப்பவர் தமிழிசை சௌந்தர்ராஜன். எப்போதும் பிசியாக இருப்பார். அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து கட்சியின் அன்றாட அசைவுகள் பற்றியும் தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது எனவும்  நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரிய வெற்றியடையும் எனவும் கூறி வருவார்.
 
இவரை பலர் சமூக வலைதளத்தில் கிண்டலடிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. எல்லோரும் அவரின் கட்சியையையும், அவரின் கொள்கைகளையும் விமர்சிப்பார்களே தவிர, தனிப்பட்ட முறையில் அவரது தோற்றத்தை வைத்து விமர்சிப்பது இல்லை.
 
இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்று அவரது உருவத்தை வைத்தும், அவரது நிறத்தை பற்றியும், தரம் தாழ்த்து விமர்சித்துள்ளது. இது குறித்து பேசிய அவர் வக்கிர குணம் கொண்டவர்களே இப்படி விமர்சிப்பார்கள். இதனால் என் குடும்பத்தை சார்ந்தவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். அரசியல் பின்புலம் உடைய என்னையே இப்படி விமர்சிக்கிறாகள் என்றால் புதிதாக அரசியலில் நுழையும் பெண்களை எப்படி விமர்சிப்பார்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments