Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த போலி மருத்துவர் கைது!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (13:20 IST)
கோவையில் ஹோமியோபதி மருத்துவர் எனக்கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த நாகர்கோவிலை சேர்ந்த ஹரேந்திரன் @ எர்வின் எவின்ஸ்  என்பவர் கேரள போலீசாரால்  கைது. 
 
அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ஒருபுறம் மட்டும் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000  ரூபாய் நோட்டுகள், போலி தங்க பிஸ்கட்,ரப்பர் ஸ்டாம்ப், ஏர் கன் துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் போத்தனூர் போலீசாரால் பறிமுதல்  
 
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தலையோலப்பறம்பு காவல் நிலையத்தில் எர்வின் எவின்ஸ் மீது  உள்ள வழக்கு தொடர்பாக கேரள போலீசார் எர்வின் எவின்ஸ்யை திருப்பூரில் கைது செய்தனர்.
 
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கோவை வெள்ளலூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது.
 
இதுகுறித்து கேரள போலீசார் அளித்த தகவலின் பெயரில் எர்வின் எவின்ஸ் தங்கி இருந்த வீட்டை கோவை போத்தனூர் போலீசார் சோதனையிட்டனர்.
 
சோதனையில் போலி தங்க கட்டி ,போலி ரூபாய் நோட்டுகள் போன்றவை வீட்டில் இருந்ததால் வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் புகாரை பெற்று எர்வின் எவின்ஸ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதவாத சக்திகளுடன் அதிமுக?! திமுகவில் இணைந்த மற்றொரு அதிமுக பிரபலம்!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

அடுத்த கட்டுரையில்
Show comments