Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது அவதூறு பதிவு: பிரபல ஃபேஸ்புக் பயனாளி கைது

ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது அவதூறு பதிவு: பிரபல ஃபேஸ்புக் பயனாளி கைது
, புதன், 18 ஜூலை 2018 (08:50 IST)
தமிழக ஃபேஸ்புக் பயனாளிகள் பலருக்கு மன்னை சிவா என்பவரை தெரிந்திருக்கும். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வந்துள்ளார். டிடிவி தினகரனின் ஆதரவாளரான இவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தரக்குறைவாக மன்னை சிவா கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரும்,  சுதா என்பவரும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
webdunia
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த குற்றப்பிரிவு போலீசார் மன்னை சிவாவை தகவல் தொழில்நுட்பச்சட்டம், பெண் வன்கொடுமை சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

19 வது மாடியில் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய 5 வயது சிறுவன்