காதலிக்க வற்புறுத்தி பேஸ்புக்கில் மிரட்டிய இளைஞர்; தீக்குளித்த மாணவி

Webdunia
திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (15:33 IST)
திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை காதலிக்க வற்புறுத்தி மிரட்டியதை அடுத்து கல்லூரி மாணவில் தீக்குளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
திருச்சி பகுதியைச் சேர்ந்த விஷால் என்ற 19வயது இளைஞர் பேஸ்புக் மூலம் இலக்‌ஷ்ண்யா நட்பு பட்டியலில் இணைந்துள்ளார். இவரும் கடந்த 1 வருடமாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் விஷால் இலக்‌ஷ்ண்யாவிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
 
இலக்‌ஷ்ண்யா இதற்கு மறுப்பு தெரிவிக்க, குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன் என்று விஷால் மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் இலக்‌ஷ்ண்யா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
தீக்குளித்த இலக்‌ஷ்ண்யாவை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இலக்‌ஷ்ண்யா குடும்பத்தினர் விஷால் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் விஷாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments