கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
புன்னம் சத்திரம் அருகே செயல்படும் கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்... நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் சாரணர் இயக்கம் இரண்டும் இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாமினை கல்லூரி தலைவர் திருமதி ராஜேஸ்வரி கதிர்வேல் அவர்கள் தலைமை வகித்தார் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் அவர்கள் முன்னிலை வகித்தார் கல்லூரி முதல்வர் முனைவர் மு மனோ சாமுவேல் ஐயா அவர்கள் தொடங்கி வைத்தார்...
இம்முகாமில் கரூர் ஆர்த்தி கண் மருத்துவமனை மருத்துவர் (டாக்டர். விஸ்வ நந்தா MS Ophthal) அவர்கள் கலந்துகொண்டு மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் , என அனைவருக்கும் கண் பரிசோதனை மேற்கொண்டார்... இதில் அனைத்து மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் என அனைவரும் பயனடைந்தனர்....
அதனை தொடர்ந்து மருத்துவ முகாம் நடைபெற்றது..
நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் சாரணர் இயக்கம் இரண்டும் இணைந்து நடத்திய மருத்துவ முகாம் நடைபெற்றது.. இதனை கல்லூரி தலைவர் திருமதி ராஜேஸ்வரி கதிர்வேல் அவர்கள் தலைமை வகித்தார் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் பிரீத்தி கவுதமன் அவர்கள் முன்னிலை வகித்தார் கல்லூரி முதல்வர் முனைவர் மு மனோ சாமுவேல் ஐயா அவர்கள் தொடங்கி வைத்தார்...
இம்முகாமில் அனைத்து துறை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனர்..