Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடம் ஆய்வு!

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடம் ஆய்வு!
, சனி, 15 ஏப்ரல் 2023 (11:40 IST)
மதுரையில் சித்திரை திருவிழா எப்ரல் 22 முதல் மே 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது, மீனாட்சியம்மன் கோவிலில் 12 நாட்களும், கள்ளழகர் கோவிலில் 10 நாட்களும் சித்திரை திருவிழா நடைபெறுகிறது, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு மே 5 ஆம் தேதி காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் நடைபெறுகிறது.
 
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடத்தினை அழகர்கோயில் துணை ஆணையர் ராமசாமி ஆய்வு செய்தார், துணை ஆணையருடன் ஆய்வுக் குழுவினரும் ஆய்வில் ஈடுபட்டனர், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்க் கொள்ளப்பட்டது, தடுப்பு வேலிகள், பந்தல், மலர் அலங்காரம், மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
 
மேலும் தண்ணீர் பிய்சுதல் நடைபெறும் இராமராயர் மண்டபத்திலும் ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்தனர், சித்திரை திருவிழாவிற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் மாநகராட்சி செய்ய வேண்டிய பணிகள் குறித்து நேற்று ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் அழகர்கோயில் நிர்வாகம் சார்பில் இன்று ஆய்வு செய்யப்பட்டது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவில் இணைந்த கோவை செல்வராஜூக்கு புதிய பொறுப்பு !