Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் வேண்டாம் என தமிழக அரசு கூறியதா? ரயில்வே துறை விளக்கம்.

Mahendran
புதன், 15 ஜனவரி 2025 (14:02 IST)
மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டம் வேண்டாம் என தமிழக அரசு கூறியதாக மத்திய ரயில்வே அமைச்சர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளார்.
 
இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறிய போது, "அமைச்சர் நிதின் கட்காரி அளித்த பேட்டியின்போது சத்தம் அதிகமாக இருந்ததால், அவர் கூறியதை செய்தியாளர்கள் சரியாக கவனிக்கவில்லை. தனுஷ்கோடி ரயில்வே திட்டம் குறித்து கேட்டதாக நினைத்து, அது தொடர்பாக பதில் தரப்பட்டது. அன்றைய தினம் ரயில்வே அமைச்சரின்  பதில் தனுஷ்கோடி திட்டம் பற்றியது; மதுரை-தூத்துக்குடி திட்டம் பற்றியது அல்ல," என விளக்கம் அளித்துள்ளனர்.
 
நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனையால் தனுஷ்கோடி திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக தமிழக அரசு கடிதம் அனுப்பி இருந்தது. மேலும், மதுரை-தூத்துக்குடி பற்றிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பதிலளித்து விட்டதாக குழப்பம் ஏற்பட்டுவிட்டது என்றும் தெற்கு ரயில்வே அளித்திருக்கும் விளக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மதுரை-தூத்துக்குடி மக்களின் நீண்டகால கோரிக்கையான மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய அகல ரயில் பாதை திட்டம் மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை அந்த பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை காணும் பொங்கல்.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்த பழவேற்காடு நிர்வாகம்..!

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

62 பேர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீராங்கனை.. நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்

தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? போலீஸ் ஆட்சியா? அன்புமணி கேள்வி..!

ஒரு பெண் பாதிக்கப்படும்போது இந்த ஆட்சி, அந்த ஆட்சி என பிரித்து பேசுவதா? குஷ்பூ ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments