Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மாவட்டங்களில் காத்திருக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2024 (09:45 IST)

தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

தென்மேற்கு பருவமழை காரணமாக அரபிக்கடலோர மாநிலங்கள், வட மாநிலங்கள் மழை, வெள்ளத்தை சந்தித்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வபோது பெய்து வரும் மழையால் குளிர்ச்சி அடைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இந்நிலையில் இன்றும் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மாலை நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments