Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடநாடு கொலை: சிக்கலில் முக்கிய அரசியல் புள்ளிகள்!

கொடநாடு கொலை: சிக்கலில் முக்கிய அரசியல் புள்ளிகள்!

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (13:22 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த காவலர் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் அடுத்தடுத்து பல அதிரடி தகவல்கள் வெளியாகி வருகின்றன.


 
 
இந்த கொலை, கொள்ள சம்பவத்தில் 11 பேர் குற்றவாளிகள் என கூறப்பட்டது. அதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார்டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவரது கூடாளி சயன் விபத்தில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 9 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
 
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அவர்களில் சிலர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில மாவட்ட செயலாளர்களுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்துள்ளது. அந்த முன்னாள் அமைச்சரின் ஏற்பாட்டில் தான் அந்த 9 பேரில் இருவரான ஜதீன் ஜாய் மற்றும் ஜம்சீர் அலி ஆகியோர் முன்னர் கொடநாட்டு பங்களாவில் கட்டில், மெத்தை, ஃபர்னிச்சர் போன்றவைகளை அமைக்கும் பணிக்கு சென்றிருந்தனர்.
 
அப்போது உள்ள பழக்கத்தை வைத்து அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். அந்த நபர்கள் கொள்ளை சம்பவத்தை முடித்துவிட்டு காரில் தப்பித்து ஓடிய போது செக் போஸ்ட் காவலர்களிடம் சிக்கியுள்ளனர். அந்த சமையத்திலும் முன்னாள் அமைச்சர்கள் இருவர் தான் அவர்கள் தப்பிக்க உதவியுள்ளனர்.
 
அதுமட்டுமல்லாமல் இந்த கொலை சம்பவம் நடக்கும் முன்பாகவே கார் விபத்தில் சிக்கி உயிரழந்த கனகராஜும், தற்போது மருத்துவமனையில் உள்ள சயனும் முக்கியமான அரசியல் புள்ளிகளுடன் சிலருடன் போனில் பேசி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் சென்னையை சேர்ந்த அந்த அரசியல் புள்ளி இதில் சிக்கி விசாரணையை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கு கவிதை.. துலாரி தேவி கொடுத்த சேலை அணிந்து பட்ஜெட் உரையை தொடங்கிய நிர்மலா சீதாராமன்..!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. இன்றும் உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

பக்தர்களை ஆபாசமாக திட்டிய திருப்பதி கோவில் தேவஸ்தான ஊழியர்.. அதிரடி நடவடிக்கை..!

சிறைக்கைதியுடன் மசாஜ் சென்டர் சென்ற காவலர்கள்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

இன்று முதல் அமல்படுத்தப்படும் யு.பி.ஐ., புதிய விதிகள்.. பண பரிவர்த்தனை செய்ய என்னென்ன கட்டுப்பாடு?

அடுத்த கட்டுரையில்
Show comments