Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 24 February 2025
webdunia

நண்பனைக் கொலை செய்த ராணுவ வீரர் – விடிய விடிய பிணத்தோடு காவல் !

Advertiesment
நண்பனைக் கொலை செய்த ராணுவ வீரர் – விடிய விடிய பிணத்தோடு காவல் !
, சனி, 7 செப்டம்பர் 2019 (10:28 IST)
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனது நண்பனைக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் விடிய விடிய அந்த பிணத்தோடு காவலுக்கு இருந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சதீஷ்குமார். இவருக்கும் அருகில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் நாராணயசாமி என்பவருக்கும் நல்ல பழக்கம் இருந்து வந்துள்ளது.இருவரும் தினமும் இரவில் ஒன்றாக அமர்ந்து மதுக் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஒருநாள் நாராயணசாமிக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையில் பிரச்சனை எழுந்துள்ளது. அப்போது சதீஷ்குமார் நாராயணசாமிக்கு ஆதரவாகப் பேசாமல் அவரது உறவினர்களுக்கு ஆதரவாகப் பேசி வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த நாராயணசாமி சதீஷை வஞ்சம் தீர்க்க காத்திருந்துள்ளார்.

இந்நிலையில் எப்போதும் போல நேற்று முன் தினமும் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது போதை ஏறிய நிலையில் இருந்த சதீஷைக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார் நாராயணசாமி. இதையடுத்து இரவு முழுவதும் அவரது சடலத்தோடு இருந்த அவர் விடியற்காலையில் காய்கறி வண்டியில் அவரது உடலைப் போட்டுவிட்டு சென்றுள்ளார். சதீஷ்குமாரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் அவரத்ய் பர்ஸில் இருந்த அடையாளங்களை வைத்து நாராயணசாமி மேல் சந்தேகம் வந்து அவரை விசாரணை செய்ய உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”ஒவ்வொரு இந்தியருக்கும் இஸ்ரோவின் அர்ப்பணிப்பு உத்வேகத்தை கொடுக்கும்”.. ராகுல் காந்தி பாராட்டு