Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுகவிற்கு தாவிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ? : கரூரில் பரபரப்பு

திமுகவிற்கு தாவிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ? : கரூரில் பரபரப்பு

திமுகவிற்கு தாவிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ? : கரூரில் பரபரப்பு
, புதன், 5 அக்டோபர் 2016 (17:52 IST)
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் தி.மு.கவில் இணைந்தாரா என்று தொலைக்காட்சிகளில் செய்திகள் ஒட, கரூரில் கேபிள் கரெண்ட் ஆகி விட, அந்த செய்தி உண்மைதான என்று கரூரில் பரபரப்பு கிளம்பியது.


\

 
மேலும் அ.தி.மு.க-வில் அம்மாவிற்காக மாதம், மாதம் சம்பளத்தொகைகளை கொடுத்து வந்த அவருக்கு இம்முறை அதே அ.தி.மு.க கல்தா கொடுத்தது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் ஒரு யூனியன் கவுன்சிலர் சீட் கூட தரவில்லை என்று அடுக்கடுக்கான ஆதங்கங்கள் அ.தி.மு.க வில் உள்ள காமராஜிற்கு குவிய அவரால் பதில் கூற முடியவில்லையாம்.
 
சரி கட்சியின் வேலைகளிலும், எல்லாவற்றிலும் ஒரங்கட்டப்பட்ட காமராஜிடம் திமுக-வில் இணைந்து விட்டீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, என் பேச்சு, மூச்சு, உயிர் உள்ளவரை அம்மாவிற்காக தான் என்றும், அ.தி.மு.க விற்கு என்றும் கூற.. நிம்மதியாக நிருபர்கள் பெரு மூச்சு விட்டனராம்.
 
ஆனால் விரைவில் இவரை தி.மு.க வில் இணைய தி.மு.க கே.சி.பி திட்டம் தீட்டி வருவதாக கூறப்பட்டு வருகின்றது. காரணம் தற்போதைய எம்.எல்.ஏ கீதா என்கின்ற கீதா மணிவண்ணன் தான், 
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (5-10-2016) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நாகை தெற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வேதாரண்யம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.வி.காமராஜ்   தி.மு.க.வில் இணைந்தார். 
 
உடன் வேதாரண்யம் நகரம், 1வது வார்டு அ.தி.மு.க. செயலாளர் சி.சா.கபீரும் இணைந்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., நாகை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் எம்.கௌதமன், விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் உ.மதிவாணன், எம்.எல்.ஏ., தலைமை நிலையச் செயலாளர் பூச்சி எஸ்.முருகன், சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன், மாவட்ட அவைத்தலைவர் மா.மீனாட்சிசுந்தரம், வேதாரண்யம் மேற்கு ஒன்றியச் செயலாளர் சா.குமரவேல், மாவட்ட பிரதிநிதி சீ.சாகுல்ஹமீது, வர்த்தகர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் உதயம் முருகையன், ஆர்ஏ.பி.அண்ணாதுரை, இரா.தங்கதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
 
இந்நிலையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கடந்த முறை இவர் எம்.எல்.ஏ வாக இருந்த போது, மாதம், மாதம் சம்பளத்தொகைகளை ஏழை, எளியவர்களுக்கும், நரிக்குறவர்கள், ஹெ.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள், தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கொடுத்து வந்தார். 
 
இவருக்கு இந்த முறை அ.தி.மு.க கட்சி சீட்டு கொடுக்க வில்லை, மேலும் உள்ளாட்சி தேர்தலிலும் சீட்டு கொடுக்க வில்லை. இந்நிலையில், இவரது ஆதரவாளர்கள் என்று கூறப்படும் எவருக்கும் சீட்டு கொடுக்க வில்லை. ஏன் என்றால் தற்போது அதே கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான கீதா என்கின்ற கீதா மணிவண்ணனால் தான் என்கின்றனர் கட்சியினர். 

webdunia

 

 
மேலும் அவர் மாதம், மாதம் சம்பளம் கொடுத்து விளம்பர படுத்திக் கொண்டதால், நான் ஏன் மாத சம்பளம் தர வேண்டுமென்று நிருபர்களையே விளாசி வரும் தற்போதைய எம்.எல்.ஏ கீதா விற்கு, என்ன தான் தைரியம் என்றால், அ.தி.மு.க வில் மாவட்ட  ஊராட்சி தலைவர் பதவியிலிருந்த அவரை, அ.தி.மு.க வில் அதுவும் எம்.எல்.ஏ சீட்டு கொடுக்காத நிலையில், அ.தி.மு.க வின் கழக கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பித்துரையின் சிபாரிசால், எம்.எல்.ஏ வேட்பாளராக களமிறங்கினார். 
 
மேலும் அப்போது அவரது கணவர் நெரூர் வடபாகம் பஞ்சாயத்து தலைவர் பதவி வகித்து ஏராளமான மோசடி செய்ததாக கூறப்பட்டு அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி பஞ்சாயத்து தலைவர் பதவியை பறித்தார். மேலும் கணவர் தவறு செய்து விட்டாரே என்று உணர்ந்த கீதா மணிவண்ணன், உடனே மணிவண்ணன் என்ற பெயரை கட் செய்து விட்டு கீதா என்று கூறி எம்.எல்.ஏ வேட்பாளராக வாக்குகள் சேகரித்து வந்தார். 
 
மேலும் இந்த அ.தி.மு.க வேட்பாளருக்கு அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம். காரணம் இவரை எதிர்த்து நின்றது, தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த புதிய தமிழகம் கட்சியை சார்ந்த தொலைக்காட்சி பெட்டி சின்னத்தை சார்ந்த அய்யர் என்பவர் தான். 
 
முதல் அதிர்ஷ்டம், பின்பு எந்த கட்சியின் பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவிற்காக மாதம், மாதம் சம்பளத்தொகைகளை கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.காமராஜூம் கூட்டணியாக அவருக்கு தோள் கொடுக்கும் பொருட்டு, ஆங்காங்கே வாக்குகள் சேகரித்ததோடு. அவர் ஆற்றிய தொண்டுகள். இப்படி அடுக்கடுக்கான அதிர்ஷ்டங்களில் வெற்றியை பெற்ற கீதா இவர் வாக்குகள் சேகரிக்கும் போது கணவரை வர கூடாது என்று கட்டளையையும் இட்டதாக அ.தி.மு.க தரப்பில் கூறப்படுகின்றது. 
 
ஆனால் இவரை எதிர்த்து நின்ற தி.மு.க கூட்டணி கட்சியின் புதிய தமிழகம் கட்சியையும், அவர்களது தொலைக்காட்சி சின்னத்திற்கு பதில் அ.தி.மு.க கையாண்ட அதே இரட்டை இலை, போல, உதய சூரியன் சின்னத்தை கொடுத்திருந்தால் இவருக்கு போட்டி ஓரளவு இருந்திருக்கும்.
 
ஆனால் வாக்குகள் எண்ணப்பட்டிருக்கும் போது, ஒவ்வொரு ரவுண்டும், 10 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் கீதா முன்னேறி வருகின்றார், 11 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் கீதா முன்னேறி வருகின்றார், 12 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் கீதா முன்னேறி வருகின்றார். என்று மைக்கில் கூறியவுடன் கணவர் மணிவண்ணனும், மனைவியும் எம்.எல்.ஏ வுமான கீதா ஜோடி போட்டு வாக்கு எண்ணும் மையத்தை வளம் வந்தனர். 
 
ஆனால் அப்படியே படிப்படியாக முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் முற்றிலும் வெறுத்தனர். காரணம் மாதம், மாதம் சம்பளம் கொடுக்கும் ஒரே தொகுதி கிருஷ்ணராயபுரம் தொகுதி என்ற கோணத்தை அவர் உருவாக்கி விட்டாராம், மேலும் அவர் ஜெயலலிதா பேரவை அதாவது கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என்ற பதவி இருக்கும் போது கூட அவரை மதிக்காத அவர், கட்சி கூட்டங்களே நான் வெற்றி பெற்றதற்கு இங்குள்ள ஒரு சிலருக்கு பொறாமையாக இருக்கும் என்று கூற, கடுப்பாகி ஒரு சிலர் விரக்தியானார்கள். 
 
ஆனால் இப்படி பல, பல கூட்டங்களில் கடுமையாக ஒரு தலைபட்சமாக சாடி பேசி வந்த கீதாவிற்கு உறுதுணையாகவும், அ.தி.மு.கவை காலி செய்யும் வகையில் இருந்தது உள்ளாட்சி தேர்தல் ஆகும். முன்னாள் எம்.எல்.ஏ வும், கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான எஸ்.காமராஜ் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் என்று யாருக்கும் சீட்டு கொடுக்காமல் செய்து சகுனி வேலையை செய்து பழியை மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சுமத்தினார். 
 
ஆனால் விவரம் அறிந்த கிருஷ்ணராயபுரம் தொகுதி மக்கள் ”நம்ம, எம்.எல்.ஏ அண்ணன் காமராசிற்கே சீட்டு உள்ளாட்சியில் கொடுக்கவில்லை அப்புறம் எப்படிங்க எங்களுக்கு” என்று கூறி அப்பாவி மாவட்ட அவைத்தலைவரையும், மாவட்ட செயலாளரையும் குறைகூறி விட்டு வெளியேறினர். ஆனால் போக, போக தான் அ.தி.மு.க வில் என்ன நடக்கின்றது என்று தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில் இன்று வேதாரண்யம் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ் தி.மு.க வில் இணைந்தார் என்று கூற கரூர் மாவட்டத்தில் உள்ள காமாராஜின் ஆதரவாளர்களோ, என்ன நம்ம அண்ணன் கட்சியை விட்டு முற்றிலும் கழட்டி விட்டார்களா  என்று கூறி மாறி, மாறி போன் போட, அவர் எடுக்காமல் விட்டு விட சந்தேகம் வழுத்ததாம். ஆனால் அப்போது கரூர் மாவட்டத்தில் கேபிள் கரெண்ட்டும் சுமார் 15 நிமிடங்கள் கட் ஆனது, ஆனால் பின்பு தான் அது வேதாரண்யம் எம்.எல்.ஏ காம்ராஜ் என்று தெரிந்தது தானாம். 
 
தி.மு.க சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் கே.சி.பழனிச்சாமியோ,  முன்னாள் எம்.எல்.ஏ காமராஜிற்கு வலை விரிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும் சுமார் 6 முதல் 7 கோடி வரை கடன் உள்ள அவருக்கு தி.மு.க வட்டாரம் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும் நிலையில், அம்மாதான் எனக்கு எல்லாம் என்று கூறி வரும் காமராஜை கட்சி கரைசேர்க்குமா  இல்லை இவரும் அ.தி.மு.க விலிருந்து தி.மு.க விற்கு இணைய உள்ளாரா என்று தெரியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைமுடியால் பிரபலமடைந்த 2 மாத குழந்தை