Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாங்குநேரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: 45 நிமிடங்கள் தாமதம்

Advertiesment
நாங்குநேரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: 45 நிமிடங்கள் தாமதம்
, திங்கள், 21 அக்டோபர் 2019 (08:57 IST)
தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இன்று காலை முதல் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
 
கனமழையையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இரு தொகுதிகளிலும் வாக்களித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் நாங்குநேரி தொகுதியில் உள்ள தெய்வநாயகிபேரியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இன்று காலை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றபோது இயந்திர கோளாறு  இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு 45 நிமிடம் தாமதமாக தொடங்கியது. தற்போது இந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது
 
விக்கிரவாண்டி தேர்தல் வாக்குப்பதிவு நிலவரத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன்,  தனது அலுவலகத்தில் இருந்து கண்காணித்து வருகிறார் 
 
இந்த நிலையில் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களிலும் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தின் பண்டிகையை வளப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பாக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பகைக்கு வயது ஒன்று … பலிக்குப் பலி தொடரும் – மதுரையில் சர்ச்சையைக் கிளப்பிய போஸ்டர் !