நாகையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு.. வாக்காளர்கள் கடும் அதிருப்தி..!

Siva
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (07:39 IST)
தமிழக முழுவதும் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்கு பதிவு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக அங்கு வாக்களிக்க வந்த வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நாகையில் உள்ள 153வது  வாக்கு சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது.

காலை 7 மணி முதல் வாக்களிக்க ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என்று தேர்தல் அதிகாரிகள் கூறியது வாக்காளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து இன்னும் சிறிது நேரத்தில் கோளாறு சரி செய்து வாக்கு பதிவு தொடங்கும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினாலும் வாக்காளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ: கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பயணிகள் திடீர் போராட்டம்: தேர்தல் நாளில் இப்படி ஒரு அதிருப்தியா?

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி எந்த வங்கிக்கு மாறும்?

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments