Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனித்து நிற்க வேண்டும் என்பதெல்லாம் பேராசை! செல்வப்பெருந்தகைக்கு பதிலடி கொடுத்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

Siva
செவ்வாய், 11 ஜூன் 2024 (16:34 IST)
காங்கிரஸ் கட்சியை வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட வேண்டும் என்றும் எத்தனை நாட்கள் தான் இன்னொரு கட்சியிடம் தொகுதிக்காக கையேந்துவது என்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகைகூறிய நிலையில் தனித்து நிற்பதெல்லாம் பேராசை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிட வேண்டும் என்றும் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழகத்தில் தற்போது நடப்பதே காமராஜர் ஆட்சி தான் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் காமராஜர் ஆட்சியை தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் பதிலடி கொடுத்திருந்தார். 
 
இந்த நிலையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எல்லோரும் வென்று எம்பி ஆகிருப்பது காரணம் திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலின். தனித்து நின்ற போது டெபாசிட் இழந்தோம், எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் நமது இலக்கு, அதை விட்டுவிட்டு நான் தான் நிற்பேன், நான்தான் தோற்பேன் என்றால், அது உங்கள் இஷ்டம் ,ஆசை இருக்க வேண்டியதுதான், ஆனால் அது பேராசையாக மாறி உருப்படி இல்லாமல் போய்விடக்கூடாது’ என்று அவர் தெரிவித்திருந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவனின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments