Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எச்.ராஜா தமிழ்நாட்டில் நடமாட முடியாது: எச்சரிக்கும் இளங்கோவன்!

எச்.ராஜா தமிழ்நாட்டில் நடமாட முடியாது: எச்சரிக்கும் இளங்கோவன்!

Advertiesment
எச்.ராஜா தமிழ்நாட்டில் நடமாட முடியாது: எச்சரிக்கும் இளங்கோவன்!
, திங்கள், 1 மே 2017 (13:31 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து நாவடக்கம் இல்லாமல் சர்ச்சைக்குறிய வகையில் பேசிவந்தால் அவர் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எச்சரித்துள்ளார்.


 
 
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அடிக்கடி சர்ச்சைக்குறிய வகையில் கருத்து கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். சில வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணுவை பிராடு என கூறி விமர்சித்தார் எச்.ராஜா. மேலும் அய்யக்கண்ணு என் வீட்டில் வந்து கிடப்பார், ஆடி கார் வைத்திருக்கிறார் என பேசினார் எச்.ராஜா.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களை தேசத்துரோகி, என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெள்ளைக்காரி, இத்தாலிக்காரி என்றும் கூறியது தமிழக காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 
சமீபத்தில் பேசிய எச்.ராஜா தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் புகழிடமாக இருந்து கொண்டிருக்கிறது. அதனால் அய்யாக்கண்ணுவுக்கும் அப்சல்குரு குழுவுக்கும் என்ன தொடர்பு என்பதை தமிழக முதலமைச்சர் உடனடியாக விசாரிக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் அய்யாக்கண்ணுவை கைது செய்து விசாரிக்க வேண்டிய முறையில் விசாரிக்க வேண்டும் என்றார்.
 
இந்நிலையில் நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தமிழக தலைவர் இளங்கோவன் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நாவடக்கம் இல்லாமல் பேசி வருகிறார். அவருக்கு நாவடக்கம் தேவை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பற்றி தவறாகப் பேசிய அவர், தற்போது 40 நாட்களாக உயிரைப் பணயம் வைத்து போராட்டம் நடத்தி வந்த அய்யாக்கண்ணுவை தீவிரவாதியுடன் தொடர்பு படுத்தி பேசியுள்ளார். எச்.ராஜா தொடர்ந்து இப்படி பேசி வந்தால் அவர் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்று எச்சரித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரனுக்கு தொடரும் சிக்கல்: மேலும் 50 லட்சம் லஞ்சம் பணம் சிக்கியது!