Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சபாநாயகர் தனபாலின் முகமும் சரியில்லை...: ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை கருத்து!

சபாநாயகர் தனபாலின் முகமும் சரியில்லை...: ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை கருத்து!

சபாநாயகர் தனபாலின் முகமும் சரியில்லை...: ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை கருத்து!
, புதன், 22 பிப்ரவரி 2017 (15:36 IST)
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் அடிக்கடி சர்ச்சைக்குறிய வைகையில் கருத்து தெரிவிப்பதில் வல்லவர். இந்நிலையில் தற்போது தமிழக சட்டசபை தலைவர் தனபால் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் விமர்சித்துள்ளார்.


 
 
சபாநாயகர் தனபாலின் முகமும் சரியில்லை, அவரது அகமும் சரியில்லை என ஈவிகேஸ் இளங்கோவன் கூறியுள்ளது. அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக சட்டசபையில் கடந்த சனிக்கிழமை அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ரகசிய வாக்கெடுப்பு கோரிய திமுக உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் தனபாலுக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது.
 
இறுதியில் சபாநாயகரை திமுகவினர் பிடித்து இழுத்தது, மைக், இருக்கை போன்றவை உடைக்கப்பட்டது, அவரது இருக்கையில் திமுகவினர் அமர்ந்தது என பெரும் அளியே ஏற்பட்டது. இதனையடுத்து சபாநாயகர் தனபால் திமுகவினரை கூண்டோடு வெளியேற்றினார்.
 
அப்போது திமுகவினர் மீது சபைக்காவலர்கள் தாக்குதல் நடத்தியதாக திமுக குற்றம் சாட்டியது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்துகின்றனர் திமுகவினர்.
 
இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்த திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், சபாநாயகராக தனபால் தேர்வு செய்யப்பட்டபோதே, அவரைப் பற்றி எனக்கு நல்ல எண்ணம் வரவில்லை.
 
அவரின் முகமே சரியில்லையே எப்படி அவர் சபாநாயகராகச் செயல்படுவார் என சந்தேகப்பட்டேன். சட்டமன்றத்தில் அவரின் செயல்பாடுகள் மூலம் அவர் முகம் மட்டுமல்ல; அகமும் சரியில்லாதவர் என்பதை உண்மையாக்கிவிட்டார் என விமர்சித்தார். சபாநாயகரின் தோற்றம் குறித்து இளங்கோவன் விமர்சித்ததால் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மா உணவகத்தில் ஜெ. படம் அகற்றம் - பின்னணி என்ன?