Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Advertiesment
EVKS
ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை என காங்கிரஸ் பிரமுகர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் தமிழ் மகன் ஈவேரா கடந்த சில நாட்களுக்கு முன்னால் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார்.
 
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய இன்னொரு மகன் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக சேர்ந்து வந்தாலும் சரி பிரிந்து வந்தாலும் சரி நாங்கள்தான் வெற்றி அடைவோம் என்று காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை மேலிடம் அறிவிக்கும் என்னை எதிர்பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 
 
திமுக ஆட்சியின் 20 மாத கால சாதனைகளால் மகத்தான வெற்றி கிடைக்கும் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரட்டை இலை சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட் செல்லும் எடப்பாடி.. ஓபிஎஸ் என்ன செய்வார்?