ஒவ்வொரு தந்தையும் மது பழக்கத்தை கைவிடவேண்டும் - விஜயகாந்த்

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (15:17 IST)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த சிறுமி விஷ்ணுப்பிரியா(16). கூலித்தொழிலாளியான தன் தந்தையின் குடிப்பழக்கத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்  அந்த சிறுமி. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ‘’வேலூர், சின்னராஜாகுப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி விஷ்ணு பிரியா,தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மதுபாட்டில்கள் மீது சிறுமியின் புகைப்படத்தை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’டாஸ்மாக் கடைகள் முன்பு சிறுமியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அதை பார்த்தாவது ஒவ்வொரு தந்தையும் மது பழக்கத்தை கைவிடவேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

மதுவை முன்பதிவு செய்ய மொபைல் செயலி.. இனி காத்திருக்காமல் மது வாங்கி செல்லலாம்..!

ரசிகர்கள் முன்னிலையில் கபடி வீரர் சுட்டுக்கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்..

அடுத்த கட்டுரையில்
Show comments