Publish Date: Tue, 31 Oct 2023 (12:27 IST)
Updated Date: Tue, 31 Oct 2023 (12:29 IST)
உதயநிதி பற்றி துதி பாடுவது தான் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வேலை என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டிய நிலையில் இதுகுறித்து கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேட்டியில் கூறியதாவது:
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை திருச்செங்கோட்டில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, திருச்செங்கோடு தொகுதியில் எனது செயல்பாடுகள் ஒன்றும் இல்லை என பேசியுள்ளார். சட்டமன்றத்தில் அமைச்சர் உதயநிதி பற்றி துதி பாடுவது தான் எனது வழக்கம் என பேசியுள்ளார்
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆதாரத்துடன் பேச வேண்டும். இரண்டரை ஆண்டில் சட்டமன்றத்தில் நான் அமைச்சர் உதயநிதி பற்றி பேசியிருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். எனது செயல்பாடு பற்றி பேசுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. எதோ குறை சொல்ல வேண்டும் என பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
எனது தொகுதிக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் சட்டமன்றத்தில் நான் பேசியுள்ளேன். இதுகுறித்து அண்ணாமலை என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? எங்கே, எப்போது என ஊடகங்கள் முன்னிலையில் சொல்ல வேண்டும். இல்லையென்றால் நான் பேசியது தவறு என அண்ணாமலை ஒட்புக் கொள்ள வேண்டும். ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் இவ்வாறு பேசுவது அழகு இல்லை" என நாமக்கல்லில் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ பேட்டி அளித்துள்ளார்.