Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோடு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: பக்தர்கள் அதிகாலையில் தரிசனம்

Advertiesment
ஈரோடு
, திங்கள், 5 ஜனவரி 2015 (13:39 IST)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இன்று அதிகாலை நடந்த ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் பௌர்ணமி விரதம் இருந்து நேற்று இரவு பெண்கள் பௌர்ணமியை வணங்கி இரவு விரதத்தை முடித்தனர்.
 
மேலும் திருமணம் முடிந்த பெண்கள் நிலவுக்கு முன் வைத்து வணங்கிய மஞ்சள் கயிரை கழுத்தில் கட்டியும் புது வலையல் போட்டும் மகிழ்ந்தனர்.
 
இன்று அதிகாலை ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஈஸ்வரன் மற்றும் ஈஸ்வரி உற்சவர்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
 
இதையடுத்து உற்சவர்கள் சப்பரத்தில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil