Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிரைவருக்கு திடீர் மாரடைப்பு; தடுப்பு சுவரில் மோதிய பேருந்து! – ஈரோட்டில் பரபரப்பு!

Advertiesment
Bus
, ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (11:37 IST)
ஈரோடு அருகே அரசு பேருந்து ஒன்றில் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்து தடுப்பு சுவரில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் இருந்து திருப்பூர் செல்லும் பேருந்து ஒன்று ஈரோட்டின் வழியாக நேற்று காலை பயணித்துள்ளது. பேருந்து ஈரோடு அருகே செங்கோடம்பள்ளத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது பேருந்தை இயக்கிய டிரைவர் பழனிசாமிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழக்கவும் சுதாரித்த பழனிசாமி பேருந்தை சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி நிறுத்தினார். பேருந்து திடீரென தடுப்பு சுவரில் மோதியதால் பயணிகள் சிலர் காயமடைந்தனர். உடனடியாக நெஞ்சு வலியால் துடித்த டிரைவர் பழனிசாமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சுதாரிப்பாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்படியே கட்டணத்தை உயர்த்தினால்…? – தேர்வு கட்டணம் உயர்வுக்கு ஓபிஎஸ் கண்டனம்!