Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியை காப்பாற்ற 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவா? அதிமுகவின் அடுத்த பிளான்

Webdunia
புதன், 1 மே 2019 (18:55 IST)
22 தொகுதி இடைத்தேர்தலின் முடிவு ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகுக்கும் என எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் கூறி வரும் நிலையில் ஆட்சியை காப்பாற்ற ஐந்து எம்.எல்.ஏக்களை அதிரடியாக ராஜினாமா செய்ய சொல்லும் திட்டம் ஒன்று அதிமுகவிடம் இருப்பதாக டிடிவி தினகரன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
22 தொகுதி இடைத்தேர்தலில் குறைந்தது 7 எம்.எல்.ஏக்கள் கிடைத்தால் மட்டுமே அதிமுக ஆட்சி நீடிக்கும். இல்லையே மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சி கவிழ்ந்துவிடும். இந்த நிலையில் மெஜாரிட்டிக்கு தேவையான எண்ணிக்கையை குறைக்க ஐந்து எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய சொல்லும் திட்டம் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர்களிடம் இருப்பதாக இன்று செய்தியாளர்களிடம்  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் ஐந்து எம்.எல்.ஏக்களுக்கு பதிலாக ஈபிஎஸ், ஓபிஎஸ் ராஜினாமா செய்துவிட்டு ஓடும் காலம் விரைவில் வரும் என்றும், இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும்வரை ஓயமாட்டோம் என்றும் தினகரன் மேலும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments