Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓபிஎஸ் மீது இவ்வளவு கடுப்பா? பொறிந்து தள்ளிய ஈபிஎஸ்!

ஓபிஎஸ் மீது இவ்வளவு கடுப்பா? பொறிந்து தள்ளிய ஈபிஎஸ்!
, வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (12:48 IST)
அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும் என ஈபிஎஸ் கேள்வி.


அதிமுக பொதுக்குழுவில் எடுத்த தீர்மானங்கள் எதுவும் செல்லாது என சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திட்டமிட்டனர்.

இந்நிலையில் அதிமுகவில் இருவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர்களையும் இணைத்துக் கொள்வோம் என்றும் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டின் முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக இயக்கத்தை சிலர் தன் வசம் கொண்டு செல்ல முயற்சி செய்கின்றனர். அதனை தடுக்கும் போது தான் சில பிரச்னைகள் உருவாகின்றன.

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு இணையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் இப்படித்தான் அடிக்கடி அழைப்பு கொடுப்பார், யாரை எதிர்த்து பதவி பெற்றரோ அவர்களை தான் அழைப்பார்.

தர்மயுத்தம் போனதே சிலரை எதிர்த்துதான் அவர்களைதான் இப்போது அழைக்கிறார். அவருடைய மகன் எம்.பி ஆகவும், மற்றொருவர் மத்திய மந்திரியாகவும் ஆகவேண்டும், வேறு யாரைப்பற்றியும் ஓபிஎஸ்-க்கு கவலையில்லை.

அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும்? அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடியவர்களுடனா இணைவது? தொண்டர்களை காயப்படுத்திய ஓபிஎஸ் உடன் எப்படி ஒன்றிணைய முடியும்? என ஈபிஎஸ் தனது ஆதங்கத்தை வெளிப்பட்த்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனித இனத்தின் மூதாதை உயிரினம் மீதான மர்மம் விலகியது: மலப்புழை இல்லாத உயிரினத்தின் வரலாறு என்ன?