பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிக்கலா தமிழகம் வந்துள்ள நிலையில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
	
	
	தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பிரச்சாரத்தில் அதிமுகவும் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் விரைவில் அதிமுக முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகளோடு முதல்வர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை திறந்து வைக்க அதிமுக பிரமுகர்கள் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் நிலையில் பிரதமர் அல்லது பாஜக தலைவர்களை அதிமுகவினர் சந்திக்கிறார்களா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.