அதிமுகவில் முக்கிய பதவிகளில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் நியமிக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா இறந்தபிறகு பொதுசெயலாளராக சசிக்கலா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் சிறை தண்டனை பெற்ற பிறகு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் “அங்கீகரிக்கப்பட்ட கட்சியால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் எடுத்த முடிவை தேர்தல் ஆணையம் ஏற்றதில் தவறில்லை” என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது.