Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு இபிஎஸ் நேரில் ஆறுதல்.! திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என பேட்டி.!!

Senthil Velan
செவ்வாய், 9 ஜூலை 2024 (17:15 IST)
திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்று ஆம்ஸ்ட்ராங் மரணம் குறித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவிலும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்றார். அங்கு ஆம்ஸ்ட்ராங் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது  ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்தார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையை கண்டறிய சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உண்மை குற்றவாளிகளை கண்டறிவது தமிழக அரசின் கடமை என தெரிவித்த எடப்பாடி, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று  குற்றம் சாட்டினார்.

ALSO READ: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கை கிடப்பில் போட்டது ஏன்? தேசிய தேர்வு முகமைக்கு பறந்த உத்தரவு..!
 
பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என்றும் கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments