Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் தோல்விக்கு ஈபிஎஸ் எடுத்த முடிவு தான் காரணம்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (21:54 IST)
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தோல்வி அடைந்து தற்போது எதிர்கட்சியாக மாறியுள்ளது என்பதும், எதிர்க்கட்சியாக இருந்த திமுக தற்போது ஆளும் கட்சியாக மாறியுள்ளது என்பதும் தெரிந்ததே
 
இன்று முதலமைச்சராக மு க ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய அதிமுக நிர்வாகிகள் கூடினர்.
 
இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்த சர்ச்சையும் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு ஈபிஎஸ் எடுத்த முடிவு தான் காரணம் என ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வரும் திங்கட்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments