Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9.45 மணிக்கு முதல்வர் வேட்பாளரை அறிவிக்கின்றார் ஓபிஎஸ்: விடிய விடிய ஆலோசனை

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (08:04 IST)
அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 9.45 மணிக்கு அதிமுக முதல்வர் வேட்பாளரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
முதல்வர் வேட்பாளர் மட்டுமின்றி 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு தொடர்பான அறிவிப்பும் இன்று வெளியாக உள்ளது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று வருகை தர உள்ளதாகவும் அதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது 
 
முன்னதாக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு குறித்த ஆலோசனை விடிய விடிய நடைபெற்றதாகவும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்று ஓபிஎஸ் கூறியதாகவும், ஆனால் அதே நேரத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு தொடர்பான அறிவிப்பும் வெளிவர வேண்டும் என்றும் ஓபிஎஸ் நிபந்தனை விதித்ததாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிபந்தனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டதை அடுத்து இன்று காலை முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என ஓ பன்னீர்செல்வம் அறிவிக்க இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments