Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் மீண்டும் ஒரு லாக்கப் மரணம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

edappadi
, திங்கள், 13 ஜூன் 2022 (07:25 IST)
சென்னையில் மீண்டும் ஒரு லாக்கப் மரணம் ஏற்பட்டுள்ளதை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ராஜசேகருக்கு காவல்துறை விசாரணையின்போது உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது  என்றும், காவல் விசாரணையில் மரணம் என்ற பிரிவின் படி 176 சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
 
மேலும் ராஜசேகர் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரிப்பார் என சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார். மேலும் கொடுங்கையூர் லாக்அப் மரணம்  தொடர்பாக 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: 
 
விசாரணையின் போது ராஜசேகருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. மீண்டும் ஒரு லாக்-அப் மரணம், சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட திரு.ராஜசேகர் என்பவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை தருகிறது.
 
இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகி வருவதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை இவ்வாட்சியில் லாக்-அப் மரணங்களை தடுக்கவோ, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியாது என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்துவிட்ட நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விடியாஅரசில் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்து  சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?