Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்களின் துன்பத்தை தடுக்க அரசு தவறிவிட்டது – ஈபிஎஸ்!

மக்களின் துன்பத்தை தடுக்க அரசு தவறிவிட்டது – ஈபிஎஸ்!
, புதன், 20 டிசம்பர் 2023 (12:50 IST)
மழை வருவதற்கு முன்பாகவே திட்டமிட்டு தமிழக அரசு செயல் பட்டு இருந்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை குறைத்து இருக்க முடியும் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.


தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை வருவதற்கு முன்பாகவே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் மக்களின் துன்பத்தை குறைத்து இருக்க முடியும் அதை இந்த அரசு தவற  விட்டதாக குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்தவரையில் தமிழக அரசால் மீட்பு பணி துவங்கப்படவில்லை எனவும் இனியாவது துவங்குவார்களா என தெரியாது எனவும் கூறினார்.

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் பொதுமக்களை சந்தித்தபோது அதிகாரிகள் யாரும் இதுவரை வரவில்லை என கூறியதாகவும் உணவு குடிநீர் குழந்தைகளுக்கு பால் போன்றவை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் கஷ்டப்படுவதாகவும் கூறினார்.

கடந்த 14 ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் தென் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என எச்சரித்து இருந்த நிலையில் தமிழக அரசு வேகமாக செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பொதுமக்கள் இந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருக்க மாட்டார்கள் என்றார் தமிழக அரசு இதைச் செய்ய தவறிவிட்டது என்றார். டெல்லிக்குச் சென்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமரை பார்க்க செல்லவில்லை எனவும் இந்தியா கூட்டணி கூட்டத்திற்காக சென்ற போது பிரதமரை சந்தித்ததாகவும் கூறினார்.

சென்னையில் மிக் ஜாம் புயலை ஒட்டி கனமழை பெய்த நிலையில் மூன்று நாட்களாக தண்ணீர் அகற்றப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியும் அரசு செய்யவில்லை எனவும் இதனால் பொதுமக்கள் உணவுப் பொருட்கள் குழந்தைகளுக்கு பால் போன்றவை இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும் கூறினார் ஆனால் ஐந்தாம் தேதி நாடாளுமன்றத்தில் டி ஆர் பாலு 6230 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தில் எந்தெந்த துறையில் எவ்வளவு சேதம் என்பதை ஆய்வு செய்யாமல் விளம்பரத்திற்காக நாடாளுமன்றத்தில் பேசி தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டதாக கூறினார். தமிழக அரசு நிவாரணத் தொகை பெற வேண்டும் என்றால் கனமழைக்கு பின்பு ஒவ்வொரு துறை வாரியாக சேதம் மதிப்பை ஆய்வு செய்து அவற்றைக் கொண்டு நிவாரணம் கேட்டிருக்க வேண்டும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியை கடை உரிமையாளர் அபகரித்ததாக புகார்! குடி போதையில் கார்களை அடித்து நொறுக்கிய கணவர் கைது...!