எடப்பாடியாரா? பன்னீர்செல்வமா? இரட்டை இலை யாருக்கு?

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (16:10 IST)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே தலைமை குறித்த போட்டி எழுந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுசெயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார்.

ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும் தேர்தல் ஆணையத்தால் இந்த முடிவு இன்னும் அங்கீகரிக்கப்படாத நிலையில் ஓ.பன்னீர்செல்வமே கட்சி ஒருங்கிணைப்பாளராகவும், எதிர்கட்சி துணை தலைவராகவும் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசனின் தமகா கட்சிக்குத்தான் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இடைத்தேர்தலில் இந்த தொகுதியை அதிமுகவிற்கே தமகா விட்டுக்கொடுத்துள்ளது. ஆனால் ஈபிஎஸ் – ஓபிஎஸ் விட்டுக் கொடுத்து போவார்களா என்பது சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது.

ALSO READ: சிறுநீர் கழித்த விவகாரம்.. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்!

இருவரும் தங்கள் தரப்பிலிருந்து ஒரு வேட்பாளரை நிறுத்தினால் இருவரையும் ஒரே கட்சி என கருத முடியாது. ஒன்று ஒருவரை சுயேட்சையாக அறிவிக்க வேண்டி வரும் அல்லது இருவருமே தனி சின்னத்தில் போட்டியிட வேண்டி வரும் இரட்டை இலை கிடைக்காது என்ற நிலை உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் சேர்ந்து பேசி சுமூகமாக ஒரு வேட்பாளரை கட்சி வேட்பாளர்களாக அறிவிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால், இரட்டை இலையை பெறுவதில் இருவருமே மும்முரம் காட்டக் கூடும் என்றும், இதுதொடர்பாக டெல்லியின் ஆதரவை பெற இருவருமே முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments