இன்றைய கால கட்டத்தில் பொறியியல் பட்டதாரிகள் பலர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களை கலங்க வைக்கும் வகையில் ஒரு போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் பல ஆசைகளோடும், கனவுகளோடும் பொறியியல் படிப்பில் சேர்கின்றனர். படிப்பிற்காக பல லட்சங்களை செலவிடுகின்றனர். பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் பணம் பிறிப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளனர், ஆனால் அவர்களின் கல்வித்தரமோ கேள்விக்குறிதான். இதனால் படிப்பை முடித்த பின் பலர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலையில்லா பட்டதாரிகளை கலங்க வைக்கும் விதத்தில் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் சமோசா விற்க ஆட்கள் தேவை, சம்பளம் 15000 முதல் 30000 வரை, தினசரி 3-4 மணி நேரம் மட்டும் வேலை எனக் குறிப்பிடப்டுள்ளது. இதற்கு நாங்களும் விண்ணப்பிக்களாமா என பொறியியல் பட்டதாரிகள் பலர் கேட்டு வருகின்றனர்.
இது வேலையில்லா திண்டாட்டத்தை எடுத்துக்காட்டுகிறது. இது கல்வி நிறுவனங்களுக்கும், அதனை அங்கீகரிக்கும் அரசாங்கத்திற்கும் ஒரு வெட்கக்கேடான விஷயம்.