Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

J.Durai

, வியாழன், 16 மே 2024 (20:55 IST)
ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி 26 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
 
இவ்  விழாவிற்கு கல்லூரி தலைவர் மோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன் ,ரேணுகா மோகன், சுதா மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 
கல்லூரி முதல்வர் அருள்குமார் வரவேற்று பேசினார்.
 
இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் , திரைப்பட நடிகர் சௌந்தரபாண்டி வாழ்த்தி பேசினார்.
 
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தனியார் தொலைக்காட்சி நடத்தும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, சினிமாவில் திரைப்படங்களில் நடித்து வரும் காமெடி நடிகரும் ,சமூக அக்கறை கொண்டவருமான நடிகர் பாலா நிகழ்ச்சியில் ,நடிகர் விக்கி சிவாவுடன் இணைந்து  நடிகர் விஜய், விஜய் சேதுபதி , எஸ்.ஜே.சூர்யா , நடிகர் கார்த்திக், செந்தில் உள்ளிட்ட புகழ்பெற்ற சினிமா பிரபலங்களின் குரலில் மிமிக்ரி செய்தும், காமெடி செய்தும் பேசியதோடு , பாடல்களுக்கு நடனமாடி கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்களை கைத்தட்ட வைத்து மகிழ்ச்சி படுத்தினார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  நடிகர் பாலா.....
 
ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதி தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் இங்குள்ள மக்களின் அன்பு தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்தார் .
 
கருத்து சொல்லும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை என்றும் , நம்மால் முடிந்ததை பிறருக்கு செய்ய வேண்டும் என்பதால் செய்கிறேன்.
தமக்கு அரசியல் பற்றி எல்லாம் தெரியாது என்றார்.
 
பலருக்கும் தெரிந்த நடிகராக இருக்கும் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் மக்களுக்கு நல்லது செய்வாரா என்ற கேள்விக்கு? 
 
யாராக இருந்தாலும் அரசியலுக்கு வந்தால் நல்லது தான் செய்வார்கள் என்றும்  மற்றவர்களை பற்றி சொல்வதற்கு எனக்கு தகுதி இல்லை. 
 
நான் ஒரு சாதாரன மனிதன் என்றும் அவர்களெல்லாம் மிகப்பெரிய ஆள்.
 
அவர் நம்மளால் முடிந்தது சம்பாதிப்பது மட்டுமே, ஒரு சிலர் சொல்வதை போல என் பின்னால் யாருமில்லை. 
 
என் பின்னால் இருப்பது கஷ்டங்கள்,  வெட்கம், அடி,  வலி ஆகியவை மட்டும் தான் என்றும் இதற்கடுத்து எனக்கு தோள் கொடுப்பது நடிகர் லாரன்ஸ் அண்ணன் தான், மேலும் ஒரு சிலர் கூறுவது  போல கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக நான் மாற்றவில்லை. வெயிலில் நின்று நான் கருத்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்றும் ,மூன்று வேளை உணவுக்கு சிரமப்பட்ட எனக்கு, உணவு கிடைத்ததால் இந்த எண்ணம் தோன்றியதாகவும் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை