தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
டாஸ்மாக் தலைமையகம் மீது அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை சட்டபூர்வமானது அல்ல என்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதே கோரிக்கையை முன்வைத்து டாஸ்மாக் நிர்வாகமும் நீதிமன்றத்தை நாடியது.
இந்த வழக்கில் பதிலளிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில், "சோதனை முறையானது. மாநில அரசு இவ்வாறு நீதிமன்றத்தை அணுகியிருப்பது சரியல்ல. சோதனையை எதிர்த்து அமலாக்கத்துறையிடம் முறையிட வழிகள் இருந்தும், நேரடியாக நீதிமன்றத்துக்கு செல்வது அவசியமில்லா முடிவு," எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், "டாஸ்மாக் முறைகேடுகளுக்காக லஞ்ச ஒழிப்பு பிரிவு வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையில் மட்டுமே சோதனை நடந்தது. அரசு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்," என்றும் மனுவில் தெரிவித்துள்ளது.