Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

Advertiesment
தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

Siva

, வியாழன், 6 மார்ச் 2025 (20:04 IST)
தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்வது வெட்கக்கேடு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீடு மற்றும் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அலுவலகம் ஆகியவற்றில் அமலாக்கத்துறை சோதனை செய்த நிலையில் டாஸ்மாக் நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
 
தமிழக அரசு நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு, தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன, திரு முக ஸ்டாலின்..
 
ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு, இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது. 
 
பன்மொழி கற்கும் உங்கள் கட்சிக்காரரின் குழந்தையை அழைத்து, இருமொழி கற்பதன் நன்மைகள் என்று ஒரு காணொளியை வெளியிடச் செய்து இந்தச் செய்தியை வழக்கம்போல திசைதிருப்ப முடியுமா என்று பாருங்கள். 
 
வெட்கக்கேடு!
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!