ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவெங்கடம் இன்று போலீஸாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டதில் சந்தேகம் உள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார் சென்னை ரவுடி திருவெங்கடம் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர்.
இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருவெங்கடம் இன்று காலை புழல் பகுதியில் அழைத்து சென்றபோது தப்பி ஓட முயன்றதாக போலீஸாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் அளித்துள்ள விளக்கத்தில், புழல் பகுதியில் திருவெங்கடம் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய அவரை அழைத்து சென்றதாகவும், அப்போது திருவெங்கடம் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் சுட முயன்றதாகவும், தற்காப்புகாக ரவுடி திருவெங்கடத்தை என்கவுண்ட்டர் செய்ததாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த என்கவுண்ட்டரில் சந்தேகம் இருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சரணடைந்தவரை அதிகாலை நேரத்தில் அவசரமாக அழைத்து செல்ல வேண்டியதன் அவசியம் என்ன?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Edit by Prasanth.K